பாமக கட்சியின் முக முக்கியமான தூண்களில் ஒன்றாக விளங்கியவர் காடுவெட்டி குரு. சில ஆண்டுகள் முன்பு அவர் மறைந்த நிலையில் அவரது மகன் கனலரசன் பாமகவோடு முரண்பாடி எழுந்த நிலையில் மாவீரன் மஞ்சள் படை என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினோடு பேசிய கனலரசன் இந்த சட்டமன்ற தேர்தலில் மாவீரன் மஞ்சள் படை திமுகவிற்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கனலரசன் ”மறைந்த காடுவெட்டி குரு அவர்களுக்கு நினைவு சின்னம் அமைப்பது, வன்னியர் சமுதாயத்திற்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளேன். இதுகுறித்து தலைமையோடு விவாதிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். பாமக மக்கள் நலனை தவிர்த்து பெட்டி வாங்கி கொண்டு கட்சி மாற ஆரம்பித்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.