கமல்ஹாசனை ஷங்கர் மட்டும்தான் முதல்வராக்க முடியும்: செல்லூர் ராஜூ

சனி, 4 நவம்பர் 2017 (18:21 IST)
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூவை சமூக வலைத்தளங்கள் முதல் ஊடகங்கள் வரை கலாய்ப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று அளித்த பேட்டி ஒன்றில் அவர் நடிகர் கமல்ஹாசனை கலாய்த்துள்ளார்.


 


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, 'கமல்ஹாசன் முதல்வர் ஆவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, 'கமல்ஹாசனை இயக்குனர் ஷங்கர் மட்டுமே தனது படங்களில் முதல்வராக்க முடியும்' என்று கூறினார்.

இயக்குனர் ஷங்கர் தனது முதல்வன் படத்தில் அர்ஜுனை ஒருநாள் முதல்வராக்கியது போல் அடுத்து இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசனை முதல்வராக்குவார் என்று கலாய்க்கும் வகையில் அமைச்சர் கூறியுள்ளதாக தெரிகிறது.

அமைச்சரின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்கள் டுவிட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர். வரும் 2019ஆம் ஆண்டு கமல்ஹாசனை ஷங்கர் முதல்வர் ஆக்குவாரா? அல்லது மக்கள் முதல்வர் ஆக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று கமல் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்