இதனால் கமலுக்கும் பாஜக, அதிமுகவினருக்கும் கருத்து யுத்தம் நீடித்து வந்தது. முதலில் கமலை சுப்பிரமணியன் சுவாமி தான் விமர்சித்து வந்தார். கமலை நாகரீகம் இல்லாமல் திட்டி வந்தார். ஆனால் சமீப காலமாக அவர் கமல் குறித்து கருத்து கூறாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று சுப்பிரமணியன் சுவாமி கமல் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ஆடம்பர முட்டாள் கமல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர இருப்பதாக தனக்கு தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். தனது மற்றொரு டுவிட்டில், முதலில் கமல் ஒரு முட்டாள், அப்புறம் அவர் முட்டாள்களின் கட்சியில் சேர்கிறார் என கூறியுள்ளார்.