கமல் வெற்றியா? தோல்வியா? வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் என தகவல்!

ஞாயிறு, 2 மே 2021 (20:30 IST)
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் பல நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் என்பது தெரிந்ததே. அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார் என்பதும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் மற்றும் வானதி ஆகிய இருவரும் முன்னிலை பெற்று அதன்பின் பின்னடைவில் இருந்து மாறி மாறி வந்தனர். ஒரு கட்டத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த வானதி திடீரென முதலிடத்தைப் பெற்றது ஆச்சரியமான ஒன்றாக இருந்தது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கோவை தெற்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் சில பிரச்சனைகள் என்றும் இதனால் 26 வது சுற்று எண்ணுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இருப்பினும் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து கசிந்த தகவலின்படி கமலஹாசன் 22 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்