மீண்டும் டிவி சினிமாவில் பிசியாகும் கமல்ஹாசன்

வியாழன், 9 மே 2019 (22:03 IST)
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ், சினிமா என பிசியாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் கட்சி ஓரளவிற்கு நல்ல வாக்கு சதவீதம் பெற்றாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அதேபோல் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஆட்சி கலைந்தால் மட்டுமே கமல்ஹாசனுக்கு மீண்டும் அரசியலில் வேலையிருக்கும். ஆட்சி காப்பாற்றப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு அரசியல் செய்ய வாய்ப்பில்லை
 
எனவே மீண்டும் கமல்ஹாசன் டிவி, சினிமா என பிசியாக முடிவு செய்துவிட்டார். பிக்பாஸ் 3 புரமோ படப்பிடிப்பில் கலந்து கொண்ட கமல், அடுத்ததாக இந்தியன் 2' படத்திற்கு உயிர் கொடுக்க முடிவு செய்துவிட்டாராம். மேலும் பாதியில் நிற்கும் 'சபாஷ் நாயுடு' 'மருதநாயகம்' ஆகிய படங்களையும் மீண்டும் அவர் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி சில பெரிய நடிகர்களின் படங்களில் கெளரவ தோற்றத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். எல்லாம் கைகூடினால் இன்னும் இரண்டு வருடத்திற்கு கமல் சினிமாவில் சொல்கிறது அவரது வட்டாரங்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்