ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ள நிலையில், படத்திற்கான முன்பதிவும் தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து காட்சிகளும் புக்கிங் ஆகியுள்ளன. மேலும் வாரிசு, துணிவு இரண்டும் ஒரே நாளில் வெளியாவதால் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே பெரும் போட்டியும் எழுந்துள்ளது.
பொங்கலையொட்டி வெளியாகும் இந்த இரண்டு படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என பலரும் கருத்து கணிப்பு நடத்தி வருகின்றனர். வாரிசா? துணிவா? என்ற இந்த போட்டிக்கு நடுவே முன்னாள் முதல்வரான காலம் சென்ற கருணாநிதி 2014ல் ட்விட்டரில் இட்டிருந்த பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. அதில் “துணிவு இருந்தால் துக்கமில்லை! துணிவு இல்லாதவனுக்கு தூக்கம் இல்லை!” என்று உள்ளது. இதனால் துணிவு படத்தின் வெற்றி அப்போதே கணிக்கப்பட்டு விட்டதாக சிலர் நகைச்சுவையாக தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கடைசியாக மோதிக் கொண்ட விஜய், அஜித் படங்களான ஜில்லாவும், வீரமும் கடந்த 2014ம் ஆண்டில்தான் வெளியானது. அதே ஆண்டில் துணிவு என்ற வார்த்தையில் கருணாநிதி பதிவிட்டுள்ள தற்செயல் ஒற்றுமை குறித்து சிலர் வியந்துள்ளனர்.