ஜெயலலிதாவின் பலநூறுகோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிப்பது யார் என்று சென்னை புகழேந்தி என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்னும் நான்கு வாரகாலத்திற்குள் ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்குமாறு இன்று உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட 913 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் இவற்றிற்கு ஜெயலிதா உயில் எழுதி வைக்காததால், உண்மையான வாரிசுகள் யாரும் இல்லாததால் இந்த பலநூறு கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
எனவே சென்னை - ,கொடநாடு போன்ற இடங்கள் மற்றும் பல மாநிலங்களில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பலகோடி மதிப்புள்ள இந்த சொத்துக்களை யார் நிர்வகிப்பது என்று கேள்வி எழுப்பி ஜெயாலிதாவின் அண்ணன் மகள் மகனான தீபக் - தீபா ஆகிய இருவரும் இது சம்பந்தமாக 4 வார காலத்துக்குள் பதிலளிக்கும் படி இன்று மதியம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.