இதனை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மக்களவைத் தேர்தலில் அதிமுக சிறு தோல்வியடைந்தது போல், இந்தியா அணி பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்றும், ஒரு வேளை நேற்றைய போட்டியில் தான் விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றிபெற்றிருக்கும் எனவும் கூறினார்.
மேலும் அவர், எதிர்காலத்தில் அதிமுக வெற்றி பெறும்போது, இந்திய அணியும் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.