கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் அக்கினி நட்சத்திரமும் தொடங்கியுள்ளதால் பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வீசி வருகிறது. அதேசமயம் ஆறுதலாக சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகின்றது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல், நீலகிரி பகுதிகளில் இதமான மழை பெய்துள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் மற்றும் மழைவாய்ப்பு குறித்து பேசியுள்ள தமிழ்நாடு வெதர்மேன் ”தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களான கரூர், ஈரோடு, நாமக்கல், வேலூர், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அடுத்த 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து பின் குறைய தொடங்கும்.