எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்து தெரிவித்த அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீரை கட்சியிலிருந்து நீக்கி ஓபிஎஸ், ஈபிஎஸ் உத்தரவிட்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஜே.எம்.பஷீர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இஸ்லாமியர்களுக்கு மரியாதை இல்லை கொடுப்பதில்லை. மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக துரோகம் இழைத்தவர் எடப்பாடிபழனிசாமி என அவர் காட்டமாக கூறியுள்ளார்.