சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்க வளாகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சட்ட ரீதியாக எந்தத் தடையும் இல்லை….எனவும், நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும் என்று தெரிவித்துள்ளார்.
இது தமிழ் சினிமா நடிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக பேசிய நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த உடன் அந்த கட்டிடத்தில்தான் என் திருமணம் நடக்கும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.