தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால். இவர், நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாக இருந்த படம் மார்க் ஆண்டனி.
ஆனால், பிரபல லைகா நிறுவனத்திற்கு விஷால் தர வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், நடிகர் விஷால் இதுவரை செலுத்தாத காரணத்தால் அவரது மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன்,
உலக திரைப்பட ரிலீஸ் வரலாற்றில்.. இப்படியான விஷயங்கள் கோலிவுட்டில் மட்டுமே அதிகம் நடக்கிறது.
பழைய பாக்கிகளை முழுமையாக செட்டில் செய்யாமல்.. அடுத்த படத்தை முடித்து ரிலீஸ் வரை கொண்டு செல்லும் தயாரிப்பாளர் மற்றும் முந்தைய தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு வேறு படத்தில் சுறுசுறுப்பாக நடித்து முடிக்கும் நடிகர்கள் ஆகியோரிடம்.. நடிகர், தயாரிப்பாளர் உள்ளிட்ட சங்கங்கள் பேசி முன்பாகவே பிரச்னையை தீர்க்க வேண்டும்.