தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அரசியல் தலைவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெரியார், அம்பேத்கர் மற்றும் எம் ஜி ஆர் சிலைகளுக்கு காவி வண்ணம் பூசுவது மற்றும் காவித்துண்டு அணிவிப்பது என அவதூறுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இதுபோல சம்பவங்கள் மேலும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள சிலைகள் அனைத்துக்கும் இரும்பு கூண்டு அரசு செலவில் செய்து வைக்க முதல்வர் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் உத்தரவு இடப்பட்டுள்ளது. இந்த இரும்பு கூண்டுகள் செய்யும் பணியை 10 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமெனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.