கோவை மாவட்டத்தில் 30 ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது.பெரிய அளவிலான மழை வால்பாறை பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பெய்து வருகிறது.கோடைகாலத்தில் குளங்கள் தூர்வாரியதால் மழைக்காலங்களில் பெரிதளவு பாதிக்கப்படவில்லை.வால்பாறையில் மண் சரிவால் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. மழை தொடர்பாக தமிழக அரசு சார்பில் பல்வேறு அறிவுரைகள் கொடுத்த வருகின்றனர்.வால்பாறையில் ஆய்வு மேற்கொண்டோம்.அதில்மண் சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.வால்பாறை முழுவதும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதே போல அப்பகுதியில் புதிதாக கட்டப்படக்கூடிய கட்டிடங்களை முறையாக ஆய்வு செய்து அனுமதி கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளோம்.மாநில அளவிலான பேரிட மேலாண்மை குழுவை வயநாடு அனுப்பியுள்ளோம்.
அதேபோல் முன்னெச்சரிக்கையாக மேட்டுப்பாளையம், வால்பாறையில் இக்குழுவினர் உள்ளனர். மாவட்ட கண்காணிப்பாளராக நந்தகுமாரை நியமித்துள்ளனர்.தொடர்ந்து அவர் மழை தடுப்பு நடவடிக்கையில் கண்காணித்து வருகிறார்.அதே போல அபாயகரமான வீட்டில் தங்கக் கூடாது என தெரிவித்து வருகிறோம்.