ஆடுகளின் கற்புக்கு ஆபத்து: பிரியாணி புகாருக்கு பதிலடி கொடுத்த இந்து முன்னணி

வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (07:19 IST)
பிரியாணி புகாருக்கு பதிலடி கொடுத்த இந்து முன்னணி
சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாஜகவினர் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக பேரணிகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று திருப்பூரில் பாஜக சார்பில் சிஏஏ ஆதரவு பேரணி நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் திடீரென திருப்பூர் பிரியாணி கடைக்காரர்கள் இணைந்து போலீசில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் தாங்கள் பிரியாணி கடைகளை திருப்பூரில் நடத்தி வருவதாகவும் அந்த வழியாக இன்று பாஜகவினர் பேரணி செல்ல இருப்பதால் தங்களுடைய பிரியாணி கடையில் உள்ள பிரியாணிக்கும் பிரியாணி அண்டாவுக்கும் பாதுகாப்பு தருமாறு கூறப்பட்டுள்ளது இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த புகாருக்கு பதிலடி தரும் வகையில் இந்துமுன்னணி திருப்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளது. அதில் ஆடுகளின் கற்புக்கு ஆபத்து இருப்பதாகவும் அந்த ஆடுகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கும் படியும் குறிப்பிட்டுள்ளனர் இதுகுறித்து அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது
 
திருப்பூரில் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டம் என்ற பெயரில் முஸ்லீம் அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர். இதற்காக முஸ்லீம் அமைப்பின் பிரதிநிதிகள் திருப்பூருக்கு வந்து செல்கின்றனர். திருப்பூரின் தெருக்களில் ஆங்காங்கே ஆடுகள் சுற்றி திறிகின்றன. இவர்களும் சுற்றி திரிகின்றனர். முஸ்லீம் அமைப்பினரால் ஆடுகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே ஒன்றும் அறியாத வாயில்லா ஜீவன்களான ஆடுகளின் கற்புக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரியாணி புகாருக்கு பதிலடி கொடுத்த இந்து முன்னணி

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்