தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டில் சோதனை..!

வெள்ளி, 26 மே 2023 (09:32 IST)
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் வருமானவரி துறையினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை பார்த்தோம். அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200க்கும் மேற்பட்ட இடங்களில் 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
தமிழகத்தில் இதுவரை முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் மட்டுமே சோதனை நடந்த நிலையில் தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரது வீட்டிலேயே சோதனை நடத்தப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் டாஸ்மாக் மற்றும் மின் துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்