சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சட்டவிரோதமான டாஸ்மாக் மதுபாட்டில்களை காலை மற்றும் இரவு நேரத்தில் விற்பனை செய்து வருவதாக மேற்கு மாவட்டம் விஜய் மக்கள் இயக்க மாணவரணி செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட 4 பேரை திருச்செங்கோடு மதுவிலக்குப் பிரிவு போலீஸார் மற்றும் பரமத்திவேலூர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள ஒரு மதுக்கடையில் எந்த நேரத்திலும் மதுபானம் வாங்கி வருகின்றனர். இங்கு, ஒரு மதுபான பாட்டிலுக்கு கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தகவல் வெளியாகிறது.