மக்களை மேலும் மேலும் முட்டாளாகி வரும் அரசியல்வாதிகள்: லேட்டஸ்ட் வரவு திருமாவளவன்

திங்கள், 17 ஜூன் 2019 (15:11 IST)
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் பாஜக அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அரசியல்வாதிகள் தங்கள் சொத்துக்களை விற்று கடனை அடைப்பது, ராஜினாமா செய்வது ஆகியவை கனவில் கூட நடக்காத காரியம் என்பது இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களுக்கும் தெரியும். அவ்வாறு இருந்தும் ஒருபுறம் முன்னாள் மத்திய அமைச்சர் சொத்துக்களை விற்று விவசாயிகளின் கடனை அடைக்க சொல்வதும், இன்னொரு புறம் அதற்கு பதிலடியாக பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் அவர் தனது சொத்துக்களை விற்கட்டும் என திருநாவுக்கரசர் கூறுவதும், இதற்கு மீண்டும் பதிலடியாக 'என்னுடைய சொத்துக்களை தர நான் தயார், அவ்வாறு தந்தால் தமிழகத்தின் 37 எம்பிக்களும் தங்களது சொத்துக்களை தருவார்களா? என பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். இதற்கு திருநாவுக்கரசரின் பக்கத்தில் இருந்து எந்தவித பதிலும் இல்லை.
 
இந்த நிலையில் திருநாவுக்கரசருக்கு பதிலாக இதற்கு திருமாவளவன் பதில் கூறியுள்ளார். அதாவது மத்தியில் புதியதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. தனது ஆட்சியை ராஜினாமா செய்தால், சொத்துகளை விற்று கடனை அடைக்கும் பொறுப்பை தமிழக எம்.பிக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.
 
மொத்தத்தில் மாறி மாறி வெற்றுச்சவால் விடுத்து மக்களை முட்டாளாக்கி வருவதாகவும் எந்த ஒரு அரசியல்வாதியும் தனது சொந்த சொத்துக்களை விற்று மக்களுக்கு கொடுத்ததாக கடந்த 50 ஆண்டுகளில் வரலாறு இல்லை என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்