எம்ஜிஆர் இடத்தை அவருக்கு பிறகு வந்த எந்த தலைவரும் நிரப்பவில்லை. வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்கள், எனவேதான் அந்த இடத்தை நிரப்ப நான் அரசியலுக்கு வந்தேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு கட்சி ஆரம்பித்தால் அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் நான் ஒரு வருடத்தில் செய்து காட்டுகிறேன் என்று கூறினேன். எம்ஜிஆர், என்.டி.ஆர், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இதை ஏற்கனவே செய்து காட்டியுள்ளனர் என்றும் கமல் தெரிவித்தார்.