இயக்குனர் பாலா சமீபத்தில் இயக்கிய தெலுங்கு ரீமேக் படமான வர்மா தயாரிப்பாளருக்குப் பிடிக்காதக் காரணத்தால் கிடப்பில் போடப்பட்டது. அதேப் படத்தை மீண்டும் வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் புதிதாக எடுத்து வருகின்றனர். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக ஒரு படம் முழுவதும் முடிந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.
இதையடுத்து அவர் நடிக்கப்போகும் திரைப்படத்தில் யார் நடிக்கப்போவது எனக் கேள்விகள் எழுந்தன. இப்போது அவரது படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் படத்துக்கு இசையமைப்பாளராக ஜி வி பிரகாஷ்குமார் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்யா நான் கடவுள் மற்றும் அவன் இவன் ஆகிய படங்களிலும் அதர்வா பரதேசி படத்திலும் பாலா இயக்கத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.