திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரும் ராமச்சந்திரன் என்பவரும் ஓரினசேர்க்கையாளர்கள் என சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து இணையர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஸ்ரீகாந்த் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.