இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு முறைப்படி அறிவித்து விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார். தமிழக சட்டசபை விதிகள் குழுவில் கொண்டுவரப்பட்ட திருத்தம் அப்படியே நீடிப்பதால் இனி வரும் காலங்களில் சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலைஞர் முதல்வராக இருந்த கால கட்டத்தில் சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்குவது வழக்கம். பின்னர் ஜெயலலிதா முதல்வரான பிறகு காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, திமுக ஆட்சியில் மீண்டும் பழைய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.