தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நிறைவடையும் நிலையில் வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன்வடிவு தாக்கல் ஆகிறது என தகவல் வெளியாகிறது.
இந்த சட்ட முன்வடிவை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். மேலும் தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்துதல் தொடர்பான சட்ட முன்வடிவு இன்று தாக்கல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்கிறார்