பைக் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - மீறினால்...!

திங்கள், 23 மே 2022 (08:25 IST)
சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. 

 
தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வரும் நிலையில் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட போக்குவரத்து பாதுகாப்பு விதிமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
 
இந்நிலையில் சென்னையில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், இதற்கான விழிப்புணர்வு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
 
இதனைத்தொடர்ந்து இன்று சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளனர். 
 
அதாவது சென்னையில் விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு வாகன சோதனை இன்று முதல் நடத்தப்படுகிறது. சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்