இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Siva

செவ்வாய், 9 ஜனவரி 2024 (07:45 IST)
இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தமிழகத்தில் ஜனவரி 9 முதல் 11 வரை மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாளை அதாவது ஜனவரி 10ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் ஜனவரி 11ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தான் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்