19 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு... நாளை இதைவிட அதிகம்!

வியாழன், 21 ஜூலை 2022 (13:32 IST)
வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல். 
 
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து வளிமண்டல கிழடுக்கு சுழற்சியால் இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
இதே போல நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
மேலும் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்