தக்காளி இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது என்பதால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து தக்காளி வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் தக்காளி விலை குறைய வேண்டுமானால் பொதுமக்கள் ஐந்து நாட்கள் தக்காளியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவ்வாறு தவிர்த்தால் தக்காளி விலை தானாக குறைந்து விடும் என்றும் பாஜக பிரமுகர் ஹெச் ராஜா ஐடியா கூறியுள்ளார்.