தனது டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆடிட்டர் குருமூர்த்தி. இவர் துக்ளக் இதழின் ஆசிரியராக இருக்கிறார். பத்திரிகையாளராக இருக்கும் இவர் செய்துள்ள பல செயல்களை தங்க தமிழ்ச்செல்வன் போட்டுடைத்துள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவை தனது போக்கிற்கு ஆட்டிப்படைத்ததாக கூறப்படுகிறது. இது தான் தமிழக அரசியலாக இந்த வருடம் முழுவதும் நடந்தது. இதனை பிரபல தமிழ் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்திக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் என்ன தொடர்பு என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தை கையில் எடுத்தார் குருமூர்த்தி.
அதிமுகவை உடைத்து, தர்மயுத்தத்தை ஏற்பாடு செய்து, இரட்டை இலையை முடக்கி, தேர்தல் ஆணையத்தில் எங்களை நிறுத்தி, எடப்பாடி பழனிசாமியை கையில் எடுத்து, இணைப்பை நடத்தி, இரட்டை இலையை வாங்கிக் கொடுத்தது என அனைத்தையும் முன்னின்று நடத்தியவர் குருமூர்த்தி தான் என்றார்.