முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச் சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக் குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து தமிழக அரசு ஆளுநருக்கு7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை குறித்து கவர்னர் இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் கவர்னர் உண்மையிலேயே தமிழக அரசு தனது முடிவை அறிவித்துவிட்டாரா? அவ்வாறு அறிவித்திருந்தால் தமிழக அரசு ஏன் இதுகுறித்த செய்தியை வெளியிடவில்லை என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்