இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில்,
''மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதபட்சத்திலும் பணமசோதாவாக இல்லாத பட்சத்திலும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். பஞ்சாப் ஆளுனர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. மீண்டும் நிறைவேற்றி அனுப்பட்ட மசோதாவை ஆளுனர் ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது'' என்று கூறியது.
இதற்கு தலைமை நீதிபதி, ஆளுநருக்கு சட்டத்தை செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ அதிகாரம் இல்லை எனக் கூறியதை அடுத்து,குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், ஆளுநர் மத்திய அரசின் Nominee என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ,இப்பிரச்சனைக்கு ஆளுனரே தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று தலைமை நீதிபதி எச்சரித்துளார்.