கௌதமிக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக: விரைவில் தலைவராகிறார்?
வியாழன், 3 நவம்பர் 2016 (12:01 IST)
நடிகர் கமல், நடிகை கௌதமி பிரிவு தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. 13 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த கமலும் கௌதமியும் பிரிந்ததற்கு பல காரணங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கூறப்படுகிறது.
ஆனால் கமலை பிரிவதாக கௌதமி அறிவிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர் பிரதமர் மோடியை போய் சந்தித்தார். தற்போது கமலை விட்டு பிரிந்த பின்னர் கௌதமி பிரதமர் மோடியை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்வதாக கூறியதாக கூறப்படுகிறது.
முன்னதாக கௌதமி திருமணமான போது அவர் பாஜகவில் இணைந்து பணியாற்றி இருந்தார். பின்னர் கமலுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்ததும் அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் கட்சி செயல்பாடுகளை குறைத்துக்கொண்டார்.
தற்போது கமலை விட்டு பிரிந்துள்ளதால் மீண்டும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள கௌதமியை தமிழக பாஜக தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழக பாஜகவுக்கு கவர்ச்சியான தலைவர் இல்லாததால் கௌதமியை பரிசீலிக்கலாம் என பிரதமர் மோடி பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் கூறியிருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.