ஓலா காரை முன்பதிவு செய்து 18 கிலோ கஞ்சா கடத்தியதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஓலா காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கும்பகோணத்திற்கு இந்த கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காரில் இருந்தா மூன்று பேரை காவல்துறையினர் விசாரணை செய்தனர்