பிளாஸ்டிக் தடை எதிரொலி: நாளை முதல் டாஸ்மாக் பார்களில் நுழைவுக்கட்டணம்

திங்கள், 31 டிசம்பர் 2018 (08:12 IST)
தமிழகத்தில் நாளை முதல் ஒருசில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டும் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள பொருட்களில் பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவைகளும் அடங்கியுள்ளதால் டாஸ்மாக் பார்களின் நாளை முதல் பார்களில் இவைகளை விற்பனை செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் பார்களின் வருமானம் பெருமளவு குறையும் என்பதால் இதனை ஈடுகட்டும் வகையில் நாளை முதல் டாஸ்மாக் பார்களில் நுழைவுக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பார்களின் வசதியை பொருத்து ரூ.10 முதல் ரூ.20 வரை பார் உரிமையாளர்கள் வசூல் செய்து கொள்ளலாம் என டாஸ்மாக் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பார்களில் இனி மதுப்பிரியர்களுக்கு கண்ணாடியில் ஆன தண்ணீர் பாட்டிலும், கிளாசும் வழங்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்