இன்று 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (07:09 IST)
இந்த முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்குவதை அடுத்து மாணவர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 
 
கொரனோ வைரஸ் பாதிப்பில் இடையே 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளிவராததால் இன்று திட்டமிட்டபடி செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன
 
 மொத்தம் 28 வகையான பாடங்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது 
 
கிருமிநாசினி கொண்டு மாணவர்கள் கைகளை சுத்தம் செய்வது, ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி வசதிகள் செய்வது, ஆய்வக பொருள்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்படுவது, மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்வது உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது 
 
இன்று தொடங்கும் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்றும் ஏப்ரல் 24 ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலகத்தில் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் ஒப்படைக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்