இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, 'தென்னிந்திய அளவிலான லாரிகள் சம்மேளனம் அறிவித்து உள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதனால் 30-ந்தேதி முதல் தமிழகத்தில் இயங்கும் சுமார் 4 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் நாள் ஒன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். எனவே மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் நடைமுறை உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும்.