தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலை சந்திக்க திமுக அதிமுக உள்பட அனைத்து கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் வரும் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10ஆம் தேதி வரை மக்களை சந்தித்து தலைவர் ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் செய்வார் என்று கூறினார். மேலும் பல்வேறு கிராமசபை கூட்டங்களிலும் முக ஸ்டாலின் பங்கேற்று கலந்துகொள்வார் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்