என்னது ‘ண்ணா நூறாண்டு நூலகமா’? தமிழக அரசை விமர்சிக்கும் திமுகவினர்!

சனி, 19 டிசம்பர் 2020 (09:55 IST)
சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு சரியாக கவனிப்பதில்லை என திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

2006-2011 கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். இதை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த கட்டிடத்தில் இருந்து நூலகத்தை மாற்றப்போவதாக அறிவித்ததை அடுத்து போராட்டங்கள் எழுந்து வாசகர்கள் நூலகத்தைக் காபாற்றினர். ஆனாலும் அந்த நூலகத்தை அதிமுக அரசு சரியாக பராமரிப்பதில்லை என சொல்லப்படுகிறது.

மேலும் 10 ஆண்டுகளாக பெரிதாக எந்த புத்தகங்களும் வாங்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்போது நூலகத்தின் முகப்பில் உள்ள பெயர் பலகையில் அண்ணாவில் ‘அ’ என்ற எழுத்து விழுந்துள்ளது. அதைக் கூட மாற்றாமல் இருப்பதாக அதிமுக அரசு மீது திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்