சேலம் பகுதியில் ஆங்காங்கே லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்ததில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி முன்னாள் தேமுதிக எம்எல்ஏ பாஸ்கர் என்பவரின் மனைவி மனோன்மணியம் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்து செல்போன், லாட்டரி சீட்டுகள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏவின் மனைவி லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.