சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா... : ஓபிஎஸ்-க்கு பாடல் மூலம் பதிலளித்த ஜெயக்குமார்
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (16:29 IST)
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா என ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு பாடல் மூலம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் என்பது ஒரு கோஷ்டி அல்ல என்றும் கோஷ்டிக்கும் கட்சிக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஓபிஎஸ் அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும் தொண்டர் ஆதரவு இல்லை என்றும் அவர் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற கர்ணன் படத்தின் பாடலை பாடி வஞ்சகன் என்பதை தினகரனுடன் ஜெயகுமார் ஒப்பிட்டார்
மேலும் திமுக அரசுக்கு செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் சொத்துவரி மின் கட்டண உயர்வு ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்