வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ளை: 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை..!
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (14:56 IST)
வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி பூட்டிய வீட்டிற்குள் கொள்ளை நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பலர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதனை பயன்படுத்தி மர்ம கும்ப கும்பல் ஒன்று சில வீடுகளில் அடித்த கொள்ளை மதிப்பு லட்சக்கணக்கில் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை அடுத்த வரதராஜபுரத்தில் வெள்ளம் நிலை காரணமாக ஆறு வீடுகள் வரிசையாக போட்டி கிடந்தன. இதையடுத்து அந்த ஆறு வீடுகளின் பூட்டுகளை உடைத்து 60 சவரன் நகை, 3 லட்ச ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
வீட்டை சுற்றி வெள்ளம் இருந்ததால் வீட்டை பூட்டிவிட்டு உயிர் பயத்தில் மக்கள் வெளியேறிய நிலையில் வெள்ளம் வடிந்த பின்னர் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது பணம் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்