துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சமீபத்தில் நடந்த நிலையில் அதில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியபோது விக்கிரவாண்டி இடை தேர்தலின் போது கள்ளக்குறிச்சியில் சோக சம்பவம் நடந்தது. கொழுத்து போய் விஷச்சாராயம் குடித்துவிட்டு செத்தார்கள் எனவும் எவன் செத்தாலும் நாங்கள்தான் அழவேண்டும் என்றும் தெரிவித்தார்,
கொழுத்து போய் குடித்துவிட்டு சென்றிருந்தாலும் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது எனவும் எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் போன்ற எதிர்கட்சி தலைவர்கள் இதனை பயன்படுத்தி பிரச்சினை இருப்பினாலும் திமுக அரசு திறம்பட செயல்பட்டது என்றும் ஆர்எஸ் பாரதி தெரிவித்தார்.