கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேஷசமுத்திரத்தை சேர்ந்த சுப்பிரமணி நேற்று தப்பியோடினார். அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் திடீர் என நேற்று தலைமறைவானார். தலைமறைவானதற்கு என்ன காரணம்? சிகிச்சையில் இருந்த அவர் திடீரென ஏன் மருத்துவமனை விட்டு யாருக்கும் தெரியாமல் ஏன் வெளியேறினார் என பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.