ரூ.1 கோடி மோசடி செய்த பெண் கைது

செவ்வாய், 21 ஜூன் 2016 (15:02 IST)
வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ. ஒரு கோடி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
 

 
ஈரோடு மாவட்டம், திண்டல் அரசு உயர் நிலைப் பள்ளியில் வாரணாம்பிகை (48) ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாககூறி அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணம் பெற்றுள்ளார்.
 
மேலும், குறிப்பிட்ட நேரத்தில் வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை வாரணாம்பிகை கைது செய்தனர்.
 
க் கொண்டு வாரணாம்பிகை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. மேலும், மோசடி செய்ததாக, ஈரோடு வட்டார காவல் நிலையம் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிலும் பல புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வாரணாம்பிகை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே ஆசிரியை வாரணாம்பிகை திடீரென தலைமறைவானார்.
 
இதனையடுத்து, அவரை வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர்  உத்தரவிட்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்