தேர்தல் அதிகாரி தாக்கப்பட்ட வழக்கு..! நீதிமன்றத்தில் மு.க அழகிரி நேரில் ஆஜர்.! பிப்.12-ல் தீர்ப்பு.!

Senthil Velan

வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:45 IST)
2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்கு தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
 
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது  மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள்,  ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு மு.கஅழகிரி தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர், மு.க. அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது.
 
இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து கேள்வி நேரம் தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜரானார்கள்.

ALSO READ: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்.!! 
 
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி உள்ளிட்ட ஆஜரானதை தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்த வழக்கின் தீர்ப்புக்காக பிப்ரவரி 12ஆம் தேதிக்கு  மதுரை மாவட்ட நீதிமன்றம்  வழக்கை ஒத்தி வைத்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்