ஒரு பக்கம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வருகின்றனர்.
கடும் கோடை வெயிலிலும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வரும் நிலையில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவு வருகிறது என்று கூறப்பட்டது. ஆனால் கோடை காலம் என்பதால் 5 மணியுடன் நிறைவு பெறும் பரப்புரை ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே 6 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது