விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு அங்கீகாரம்: தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Mahendran

சனி, 26 அக்டோபர் 2024 (10:00 IST)
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், நாளை இந்த கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத அளவில் மிகவும் வித்தியாசமாகவும் பிரமாண்டமாகவும் இந்த மாநாடு நடைபெற இருப்பதால், தமிழக அரசியல் உலகம் இந்த மாநாட்டை உற்று நோக்கி உள்ளது. குறிப்பாக, நாளை விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத் தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் "தமிழக வெற்றி கழகம்" கட்சியை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இணைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மக்களவைத் தேர்தலுக்குப் பின் 39 கட்சிகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் முதல் கட்சியாக தமிழக வெற்றி கழகம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, இந்த கட்சி தேர்தலில் போட்டியிடும் போது, தமிழகம் முழுவதும் உள்ள வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்