வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளின் மின் கட்டணம் உயர்வு: இம்மாதம் முதல் அமல்

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (14:40 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் ஒன்றான புதுச்சேரியில் வீடு உள்பட அனைத்திற்கும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
புதுச்சேரியில் தற்போது ரங்கசாமி தலைமையிலான பாஜக கூட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் அம்மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதுச்சேரியில் வீடு வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த உயர்த்தப்பட்ட மின் கட்டணம் இம்மாதம் முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதன்படி
 
இதன்படி வீடுகளுக்கான கட்டணம்  தற்போது முதல் 100 யூனிட்டுக்கு 1.90 ரூபாய் மின்சாரக் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் அது ரூ.2.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் 2.90 ரூபாயில் இருந்து 3.25 ரூபாயாகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5 ரூபாய் மின் கட்டணத்திற்கு பதிலாக ரூ.5.40 பைசா வசூலிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்