கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக போதிய பேருந்துகள் வரவில்லை என பயணிகள் திடீரென மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு முன்பே பயணிகளை ஏற்றுக் கொள்ளும் பேருந்துகள் நேராக தென் மாவட்டத்திற்கு சென்று விடுகின்றன என்றும் இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு போதிய பயணிகள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருப்பதாவது: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு குடும்பம் குடும்பமாகப் பயணிக்கக் குழந்தைகளோடு இரவு நேரங்களில் வருபவர்கள் தொலைதூர மாவட்டங்களுக்குச் செல்ல முடியாமல் பல மணி நேரங்கள் காத்துக் கிடப்பது அவலத்திலும் அவலம்.