இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை குடியிருப்பு திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களில் திமுக மிகத் தீவிரம் காட்டி வருகிறது. திமுக இளைஞரணி சார்பில் ஒரு போராட்டமும், திமுக சார்பில் ஒரு போராட்டமும், பின்னர் அனைத்து கட்சிகளையும் கூட்டி ஒரு போராட்டமும் நடத்தி தமிழகத்தையே அதிரச் செய்தது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்
புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இதுகுறித்து கூறியபோது புதுச்சேரியில் உள்ள வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, மற்றும் பொங்கல் வியாபாரம் நடக்கும் நிலையில் போராட்டம் செய்தால் வியாபாரம் பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். எனவே திமுகவின் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது