உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர். அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது.
இந்நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ளாட்சி தேர்தலில் பொதுச்சின்னம் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கு தயராகி வருகிறது. இதற்கிடையில் டிடிவி தினகரன் தேனியில் 4 - 5 இடங்களை அன்னப்போஸ்ட்டாக பெற முயற்சித்து வருகிறாராம்.